அற்புத மூலிகைகளின் செயல்பாட்டு வகைகள் – பாகம் 3

சித்த வைத்தியத்தில் பல அற்புத மூலிகைகள் உள்ளன.அவற்றின் செயல்பாடுகளை வைத்து பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.அந்த வகைகளின் பெயர்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கீழே விவரிக்கிறேன்.இவற்றை வைத்துத்தான் இன்ன மூலிகை இன்ன வியாதியை குணமாக்கும் என்று தெரிந்து தெளியலாம்.

முறை வியாதிரோதி :- முறைக் காய்ச்சல் (காலை,அல்லது மாலையில் தினமும் வரும் காய்ச்சல்,இரண்டு நாளைக்கு ஒரு முறை வரும் காய்ச்சல் இரண்டாம் முறைக்காய்ச்சல் என்றும்,மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் காய்ச்சல் மூன்றாம் முறைக்காய்ச்சல் என்றும் இதே போல பத்தாம் முறைக்காய்ச்சல் வரை உள்ள காய்ச்சல் அனைத்தும் முறை வைத்து வரும் காய்ச்சல் என்பதால் முறைக்காய்ச்சல் எனப்படும்),இதில் டைபாயிடு ,மலேரியா மற்றுமுள்ள அனைத்து முறைக் காய்ச்சல்களும் அடக்கம்.மற்றும் முறையாய் முறை வைத்து வருகிற ரோகங்கள் அனைத்தையும் தடுக்கும் மற்றும் குணமாக்கும் மருந்து (ANODYNE ).

அதிவிடயம் , அத்திக் கள் , ஈஸ்வர மூலி ( தலைச் சுருளி) , எருக்கம் பூ , ஏழிலைப் பாலை , கடுகு ரோகிணி , கருஞ் சித்திர மூலம் , களற் காய் , கொடி வேலி வேர் , ஷெண்பக மரத்தின் வேர் , சீந்திற் கிழங்கு , சீமைச் செவ்வந்திப் பூ , செந்தொட்டி , சூத்திர நாவி , செந்தொட்டி வேர் , செம்பருத்திப் பூ ,  செம்பை , திக்கா மல்லி , தும்பைப் பூ , மர மஞ்சள் , மாசிக்காய் , மிளகு , வேப்ப மரப் பட்டை , நில வேம்பு , கஸ்தூரி மஞ்சள் , சங்கங்குப்பி , உத்தாமணி ( வேலிப்பருத்தி ) , வெட்பாலை , மலை வேம்பு , துளசி , பற்பாடகம் , பீத ரோகிணி , ஆடு தீண்டாப் பாளை , குடசப்பாலைப் பட்டை , மிளகரணை , எட்டிக் கொட்டை , வசம்பு , கரு நொச்சி , பேய்ப் புடல் நெய்ச் சட்டிக் கீரை

உக்கிர ரோக சமன காரி:-தாபனம் முதலிய தீஷண வியாதிகளை சமனப்படுத்துகிற மருந்து.ரோகங்களான வியாதிகள் உக்கிரமாக உள்ளதை சமனம் செய்கிற மருந்தாகும்.

சூத்திர நாவி , நாவி , அவுரி , நந்தியாவட்டை , பூவரசு