எலும்பு முறிவிற்கு முட்டைப் பற்றிடல் – பாகம் 1

சாதாரணமாக எலும்பு முறிவு என்றவுடன் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரைப் ( ORTHO DOCTOR  ) ஐ பார்க்க ஓடுகிறோம் . அவர்களும் உடனே மாவுக்கட்டு என்ற பெயரில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் ல் ஒரு கட்டைப் போட்டு அனுப்பி வைப்பார் .அவர் கொடுக்கும் மருந்துகளை நாமும் தேமே என்று சாப்பிட்டுக் கொண்டிருப்போம் . அவை பொதுவாக வலி கொல்லும் மருந்துகள் என்ற பெயரில் வலியை தெரிய விடாமல் வைத்திருக்கும்.

நமக்கு ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதமே வலி அது மூளைக்குத் தெரிய விடாமல் செய்வதனால் , அந்த இடத்தில் பிரச்சினை ஏதும் இல்லை என்று உடல் நினைத்துக் கொண்டு  அந்த இடத்தை சரி செய்யும் வேலையை விட்டுவிடும்.இது எவ்வளவு கொடுமையான விளைவை உண்டாக்கும் என்று புரிகிறதா ????அந்த இடமே கெட்டு அழுகிப் போனாலும் உடலுக்கு அது தெரியவே தெரியாது.

எடுத்துக் காட்டாக நமக்கு காலில் முள் குத்தினால் , உடனே வலி உண்டாகிறது .பின் அந்த வலி மூளைக்குத் தெரிவிப்பதனால் , உடனே காலைத் தூக்கிக் கொள்ளுகிறோம் , அடுத்து முள்ளைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவோம் . ஒரு சர்க்கரை வியாதிக்காரருக்கு காலில் உணர்ச்சிகள் மரத்துப் போயிருக்கும் . அவருக்கு முள் குத்தினாலும் தெரியாது . விளைவு காலில் குத்திய முள் காலைப் புரையோடச் செய்தாலும் ,அது அவருக்குத் தெரியாது.விளைவு காலை எடுத்து விட நேரும் . இது போன்றேதான் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காலில் என்ன நடக்கிறது என்பதை உடல் உணராத நிலையினால்தான் புண்கள் வந்தால் ஆறுவதில்லை.இதே நிலையைத்தான் இந்த அல்லோபதி வலி நீக்கிகள் செய்கின்றன.இப்போது புரிகிறதா ??? கேடான விளைவுகள் எப்படி விளைகின்றன என்று !!!!!!

இது போக வலி நீக்கிகளுக்காகவும் ( ANALGESIC ) , உயிர் எதிர் மருந்துகள் ( ANTI BIOTIC  )  அலோபதியில் பக்க விளைவுகள் பயங்கரம்.ANTI BIOTIC   என்று அந்தப் பெயரிலேயே இருக்கிறது  உயிருக்கு எதிரானது என்று , பின் ஏன் அதை உபயோகித்து உங்கள் உயிரைக் கொன்று கொள்கிறீர்கள்.

அலோபதி மருத்துவர்கள் உபயோகிக்கும் மருந்துகளில் முக்கியமானது வோவிரான் ஊசி மருந்தும், வோவிரான் ஜெல்லும் சிறு நீரகங்களைச் சிதைத்துவிடும் .இதை அந்த மருத்துவர்களிடமே நீங்கள் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.இது போக ஸ்டீராய்டுகள் வேறு கல்லீரலையும், மண்ணீரலையும் பதம் பார்த்து நடமாடும் பிணமாகவே நம்மை ஆக்கிவிடும் .ஜாக்கிரதை ????உள்ளுறுறுப்புக்களை சேதாரமான பின் நாம் வாழ்ந்து பயன்தான் என்ன ??

என்னிடம் புற்று நோய்க்கும் இதர அலோபதி மருத்துவர்களல் கைவிடப்பட்ட நோயாளிகளும் மருந்து வேண்டும் என்று கேட்கும் போது நான் கூறுவது இது வரை நீங்கள் சாப்பிட்ட மருந்துகளே இந்த நிலைக்கு காரணம் என்று சொல்லி வரும்போதே !!! தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் என்ன செய்வது என்று சொல்லி மருந்து கேட்கும் போது எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

உங்களுக்கு ஒன்று முக்கியமாக தெரிவிக்க விரும்புகிறேன்.தலைவலி காய்ச்சல் என்பவை நோயே அல்ல.வேறு ஏதோ நோய் இருப்பதை நம் உடல் தெரிவிப்பதே ?? இதை நோய் என்று உங்கள் தலையில் அலோபதி மருத்துவம் ஏற்றிவிட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது.

வேறு என்னதான் செய்ய எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே என்று கூறுபவர்கள் மிக நல்லவர்கள் .அவர்கள் அல்லோபதி மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருந்து கொண்டு என் வலைத் தளத்தை தொடர்ந்து பார்த்து வந்தாலே போதும் . இந்த இடுகையில் எலும்பு முறிவிற்கு எப்படி கட்டுப் போடுதல் என்பதை ஒளிப்படக் காட்சியாகவும்  படங்களாகவும் வெளியிட்டுள்ளேன்.பார்த்து பயனடையுங்கள்.

எனது சித்தப்பாவிற்கு இரு சக்கர வாகன விபத்தில் அடிபட்டுவிட்டது. அந்தப் படங்களைப் பாருங்கள்.அவர் அழிசோடைக் கருப்பசாமி (அழிஞ்சில் மரங்கள் ஓடை முழுவதும் நிறைந்திருந்ததால் அழிஞ்சிலோடைக் கருப்பசாமி கோவில் என்று பெயர் பின்னாளில் மருவி இப்படி ஆகிவிட்டது ) கோவில் பூசாரியாக இருக்கிறார்.

அவருக்கு கண்ணைச் சுற்றியுள்ள இடங்களில் அடிபட்டு இருக்கிறது.இதனால் கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம்,காமபூரி வர்மம்,திலர்த வர்மம் (பொட்டு வர்மம் அல்லது சுடரொளியின் காலம்) , மின் வெட்டி வர்மம் (முன் வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்),மந்திரக் காலம்,  அடக்க வர்மம், நேம வர்மம், பட்சி வர்மம்,கண்ணாடி வர்மம்(மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற வர்மங்களில் வர்ம பாதிப்புக்கள் நேர்ந்திருக்கும்.அவற்றை நத்தைச் சூரி எண்ணெய் போக்கும்.அத்துடன் நேர்ந்த காயங்களை சந்தான கரணி போக்கும்.

கீழ்க்கண்ட புகைப்படங்கள் இரு நாட்கள் கழிந்த பின் 03/06/2012 இரண்டாவது முட்டைப் பற்று போடும் போது எடுக்கப்பட்ட படங்கள்.

பழைய முட்டைப் பற்றுடன் எனது சித்தப்பா!!!

முழங்காலிலும் காயம் . அதற்கு மேலுக்குப் போட சந்தான கரணி.

பதிவின் நீளம் கருதி பதிவு இரண்டாக இன்றே வெளியிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியை எலும்பு முறிவிற்கு முட்டைப் பற்றிடல் பாகம் 2 ல் காண்க.