அற்புத மூலிகைகளின் செயல்பாட்டு வகைகள் – பாகம் 1

சித்த வைத்தியத்தில் பல அற்புத மூலிகைகள் உள்ளன.அவற்றின் செயல்பாடுகளை வைத்து பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.அந்த வகைகளின் பெயர்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கீழே விவரிக்கிறேன்.இவற்றை வைத்துத்தான் இன்ன மூலிகை இன்ன வியாதியை குணமாக்கும் என்று தெரிந்து தெளியலாம்.

வியதாபேதகாரி:- நோயை வளர விடாமல் உடலைக் காத்து நாளுக்கு நாள் சிறிது,சிறிதாக நோயை குணமாக்கி சரீரத்தை ஆரோக்கிய நிலையில் கொண்டு வரும் மருந்துகள் ( ALTERNATIVE ) .

அசுவகந்தி(அமுக்கராக்கிழங்கு) , அவுரியிலை , அழிஞ்சில் மரம் ,அருகன் கட்டை, ஆதொண்டை , ஆழிவிதை , இலுப்பை வேர் , ராக்காசி மடல் , உகா மரம் , கடலழிஞ்சில் , கடற்பாலை வேர் , சங்கங் குப்பி , கருடன் கிழங்கு , கருப்பு அழிஞ்சில் மரம் , கார்போக அரிசி , குக்கில் , சணப்பஞ் செடி , சதுரக்கள்ளி , சரக்கொன்றை மரம் , சவுரிப்பழம் , சிறுகாஞ்சொறி வேர் ( செந்தட்டி ) , சீந்திற்கிழங்கு , செங்கத்தாரி வேர்ப்பட்டை , செவ்வல்லிப்பூ , சேங்கொட்டை , சேங்கொட்டை நெய் , தழுதாழை இலை , திக்காமல்லி , தில்லம் வித்து , தில்லம் பால் , நத்தைச்சூரி வேர் , நறு முன்னை , நறுமுன்னை வேர் , நன்னாரி வேர் , நாகமல்லி வேர் , நீரடி முத்து , நீரடி முத்து நெய் , நிர்விஷம் , நீர்ப்பூலாப்பட்டை , நொச்சி இலை , பற்பாடகம் , பாதிரி வேர் , பாலை மர வேர் , பிரம்மதண்டு , பீதரோகணி , புங்கம் பால் , பூவரசு சமூலம் , மணக்கத்தை அரிசி , மயிர் மாணிக்கம் , மர மஞ்சள் , மருதோன்றி வேர் , மாதுளம் பழ ஓடு , மாதுளம் பிஞ்சு , மாதுளம் பூ , மாவிலங்கப்பட்டை , வல்லாரை , வாய்விளங்கம் , முத்தக்காசு , வில்வப்பழம் , வில்வ வேர் , விஷ்ணு கிரந்தி ,வெங்காலி மர வேர் , வெள்ளறுகு , வெள்ளை நாவி , வேப்பம் வித்து , வெட்சி செடி.

வேதனா சாந்தினி:-நோயைத் தணிக்கும் மருந்து (ANODYNE ).வலியைக் குறைக்கும் மருந்து.

அபினி , ஊமத்தங்காய் , ஊமத்தை வித்து , ஊமத்தை , கசாகசாத் தோல் (போஸ்தக்காய் ஓடு) , கஞ்சா , கருநொச்சி இலை , கரு ஊமத்தை இலை , கரு ஊமத்தை வித்து , குரோசாணி ஓமம் , குன்றி மணி இலை , சூத்திர நாவி , செவ்வாமணக்கிலை , நாவி , நிர்விஷம் , நொச்சியிலை , பிரம்ம தண்டு , பெருந் தேட்கொடுக்கு , பொன்னூமத்தை , வெண்குன்றி இலை , வெள்ளாமணக்கிலை , அக்ரு , பெரு ஏலக்காய் , கஸ்தூரி மஞ்சள் , புங்கம் நெய் , மஞ்சள் , மருதம் பட்டை , முசற் காதிலை , எருக்கிலை.

ஆம்ல நாசினி:- வயிற்றில் உள்ள புளிப்பை கண்டிக்கும் மருந்து ( ANTACID ).

உப்பிலாங் கொடியைப் போன்ற லவண ( உப்பு ) சாரங்களைப் பெற்றுள்ள மூலிகைகள்.