ஒரு பழம் பெரும் புத்தகம் {கடுக்காய் பிரபாவ போதினி (பாகம் 4)}

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4)download

 இது ஒரு மீள்பதிவு .இந்தப் பதிவு ஏற்கெனவே மச்சமுனி வலைப்பூவில் வெளியான கட்டுரையே இது.

http://machamuni.blogspot.in/search/label/ஒரு{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20பழம்{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20பெரும்{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20புத்தகம்?updated-max=2011-03-23T01:27:00{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}2B05:30&max-results=20&start=5&by-date=false

 நமது வலத் தள அன்பர்களின் வேண்டு கோளுக்கிணங்கி மீள்பதிவாக வெளியிடப்படுகிறது.நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எம்மை அங்கேயே தங்க நிர்பந்திப்பதாலும் , பத்தியத்துடன் கற்பங்கள் எடுப்பதால் உடலின் அசதி காரணமாகவும் , எமக்கு நேரமின்மை காரணமாகிறது . சரி அது இறை விருப்பம் என்றெண்ணி எழுதுவதைக் குறைத்துக் கொண்டோம் .பதிவுகளின் எண்ணிக்கையும் மிக குறைந்துவிட்டது .

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 3) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

கடுக்காயின் உட்கொட்டையயும் மேற் தோலையும் நீக்கிவிட்டு கடுக்காயின் சதைப்பற்றான பகுதியை மட்டும் எடுத்து இடித்து (மிக்ஸியிலோ, மில்லிலோ கொடுத்து அரைக்கக் கூடாது, சூரணம் சூடானால் அதன் மருந்துத் தன்மை இழந்துவிடும், கடைகளில் விற்கும் சூரணமொ, பொடிகளோ இது போன்ற பக்குவத்தில் செய்ய மாட்டார்கள், செய்தால் அவர்களுக்கு கட்டுபடி ஆகாது, மொத்தக் கடுக்காயையும் போட்டு அரைத்தால்தான் கட்டுப்படியாகும்), வஸ்திரகாயஞ் செய்து (துணியில் சலித்து) வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்படி கடுக்காய்ப் பொடியில் முக்கால் விராகனிடை (ஒரு வராகன் என்பது 4.2 கிராம் 32 குன்றிமணி எடை ( ஒரு குன்றி மணி எடை என்பது 130 மில்லி கிராம் )ஆகும்.எனில் முக்கால் விராகனிடை என்பது 3.15 கிராம்)மேற்கண்ட அனு பான விஷேஷங்களிற் சாப்பிட வேண்டும். மேற்குறிப்பிட்ட மாத இடைவெளிக் கால அளவு முழுவதும் சாப்பிட்டால் நன்று. குறைந்த பட்சம் 14 நாட்கள் சாப்பிட வேண்டும். அப்படியும் செய்ய இயலாதவர்கள் எவ்வேழு நாட்களாவது  சாப்பிட்டு வர வேண்டும்.

இப்படிச் செய்வதால் தேக சுகம் நிலைத்திருக்கும், வேறு வியாதிகளுண்டாகா!! மலங் கிரமப்பட்டு (நாளுக்கிரு முறை), இரைப்பை முதலான இராஜ கருவிகளின் தொழிலுங் கிரமப்பட்டு வரும்.

இனி கடுக்காயை காலத்திற்கேற்றார் போல பல வகை அனுப்பானங்களுடன் ஏன் கலந்து உபயோகிக்க வேண்டுமென்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்
இதன் தொடர்ச்சி ஒரு பழம் பெரும் புத்தகம், (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5)என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி

என்றென்றும் பேரன்பினால்

சாமீ அழகப்பன்