சித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 3

எனக்கு நீங்கள் சொன்ன மாதிரி புடம் போட எல்லாம் முடியாது.எளிதான வழி சொல்லுங்கள் என்று கூறும் உங்களுக்கு ஒரு எளிதான வழி இதோ.

பெரும் பூசணிக்காய் கொண்டு வந்து அதில் ஒரு இடத்தை சிறு சதுரத்துண்டு எடுத்து (மீண்டும் அதை மீண்டும் அடைப்பது போல் இருக்க வேண்டும்) அப்பிரகம் பொடி செய்து வஸ்திரகாயம் (நல்ல சல்லாத் துணியினால்(சிறு கண் கொண்ட ) சலித்து எடுத்து ) செய்த பொடியை நிரம்ப அடைத்து அதற்குள் உலை ரசம் விட்டு முன்னர் எடுத்த வில்லையை வைத்து ஏழு சீலை மண் செய்து உறிக்குள் வைத்து அடுப்புக்கு மேலே (௪௰௫(45)) நாற்பத்து ஐந்து நாள் வைத்திருந்து (௪௰௬(46)) நாற்பத்து ஆறாவது நாள் கீழே ஒரு பாத்திரம் வைத்துக் கொண்டு ஊசியினால் ஷ காயின் (அந்தக் காயின்) அடியில் துவாரம் செய்தால் ரசம் விழும்.

இந்த ரசத்தையே ரச மணி கட்ட உபயோகிக்க வேண்டும்.இந்த ரசம் (2)இரண்டு விராகனிடை ஒரு மண்சட்டியில் விட்டு சரக் கொன்றைப்பூ ரசம் சுருக்குக் கொடுக்க ( ரசத்தை சட்டியில் விட்டு சட்டி சூடாகும் போது சரக் கொன்றைப் பூச் சாறு சிறிது சிறிதாக விடுவதையே சுருக்கு என்பார்கள் ) ரசம் மணியாகும்.சட்டியை சூடாக்கும் போது அடுப்பை தீபாக்கினி எரிவு எரிக்க வேண்டும்.( அடுப்பை தீபாக்கினி எரிவு எரித்தல் என்றால் தீபம் எப்படி எரியுமோ அப்படி எரிக்க வேண்டும் )
மீண்டும் ஒரு சுவாரசியமான மடலுடன் தங்களைச் சந்திக்கிறேன்.
நன்றி
என்றென்றும் அன்புடன்
சாமீ அழகப்பன்