முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 4

 

கும்பிடு சிப்பியும் முப்பு குரு அல்ல என்பது தெளிவாகிறது.

சிலர் முப்பூ என்பதை சோற்றுப்பு என்று கருதி அதை தச சுத்தி செய்து அதை தச தீட்சை என்று சொல்வதும் ,  அதை பனிநீரில் கரைத்து அதை வெயிலில் காயவைத்து  எடுத்துக் கொண்டு அதை முப்பூ என்றும் சொல்லி வீணில் கெட்டலைகின்றனர் .

முப்பூ என்றால் உப்பல்ல ,கருவுப்பு என்பதும் உப்பல்ல , ஊனென்ற உட்கருவும் உப்பல்ல , ஊட்டு முறை செய்வதும் உப்பல்ல , மானென்ற அண்ணுப்பு உப்பல்ல ,  மாதவிடாயனதுவும் உப்பல்ல , சானென்ற சவுட்டுப்பு ( கோவானூர்ப் பொட்டலிலே குண்டுமேனியம்மன் சன்னதியில் வாரி வருகிறார்களே அந்தக் களர் நில உவர் மண் , பூநீறு என்றழைக்கப்படுவது ) உப்புமல்ல , சாதகமாம் இவை  உப்பு வல்லத்தானே !!!என்று கீழே விளக்கியுள்ளார்கள் நீதியரசர் திரு பலராமையா அவர்கள்.

நான் ஏற்கெனவே சொன்ன கருங்குருவைக்காடி முப்பு அல்ல என்பது பற்றியும் திரு  நீதியரசர் திரு பலராமைய்யா அவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.

சித்தர்கள் சொல்லும் கல்லுப்பு தண்ணீரில் கரையாது என்று சொல்லுவதைக் கவனியுங்கள்.

குரு வண்டு என்றும் கருவண்டு என்றும் பலர் இதை எண்ணி ஏமாந்து போகிறார்கள்.

 சவுக்காரம் என்று இவர்கள் சொல்லுவதைக் கண்டு பலர் கடையில் கிடைக்கும் சவுக்காரத்திலிருந்து எண்ணெய் கழட்டுவார்களும் உண்டு.அதுவும் தவறே.

 நன்றி முப்பூ குரு ,ஆசிரியர், நீதியரசர் திரு பலராமையா அவர்கள்

முப்புளி என்றால் மலம் என்று எண்ணி பலர் மனித மலத்தையும் , அமுரி என்றால் மனித மூத்திரம் என்றும் எண்ணி பலர் மலத்தையும் மூத்திரத்தையும் கலந்து வைத்து உண்டு வருகிறார்கள்.

அப்படியானால் மனித மலத்தையுண்ணும் பன்றிகள் அஷ்டமாசித்து செய்ய வேண்டுமல்லவா????? பரகாயப் பிரவேசம் செய்ய வேண்டுமல்லவா?????

பதிவு பெரிதாய்ப் போவதால் மற்றவை முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 5 ல் காணலாம்.