திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் (2 )

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் ( பாகம் 1 ) ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி  ( பாகம் 2 ) புரியும் என்பதை  பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியானில் குறிப்பிடப்பட்டுள்ள நவலோக பூபதி எப்படி செய்வது  என்பதை இப்போது பார்ப்போம். முன் சொன்ன நவ லோகங்களையும் இங்கே சொல்லியுள்ள நவ பாஷாணங்களயும் சேர்த்து அத்துடன் கந்தகம் ( விந்து ) , சூதமான பாதரசம் ( நாதம் ) இரண்டும் சேர்த்து செய்யும் முறையைப் பார்ப்போம் .

நவ பாஷாணங்கள் படங்களை இதோ கீழே கொடுத்துள்ளேன் .

1 ) சங்குப் பாஷாணம்

2 ) கௌரி

3)மனோசிலை

4 ) தாரம் என்ற அரிதாரம் மால்தேவி

5 ) வீரம்

6)பூரம்

7) சாதிலிங்கம்

8)சிங்கி என்ற மிருதார்சிங்கி

9) காடிக் காரம்

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் பக்கம் 549 பாடல் 1685 லில் கொடுக்கப்பட்டுள்ள  நவ பாஷாணங்களான  1 ) சங்குப்பாஷாணம் , 2 ) கௌரி , 3) மனோசிலை 4 ) அரிதாரம் என்ற மால் தேவி ( திருமால் {அரி }மனைவி { தாரம் }) என்ற தாளகம் 5 ) வீரம் 6 ) பூரம் 7 ) சாதிலிங்கம் 8 ) மிருதார்சிங்கி 9 ) காடிக்காரம்

 10 ) கந்தகம் என்ற கெந்தி என்ற விந்து

11 ) ரசம் என்ற பாதரசம் என்ற சூதம் என்ற நாதம்

மேற்கண்ட அனைத்து விடயங்களையும் பொடித்துப் போட்டு கார சார ஜெய நீரில் ( பச்சை சிங்கமான பிடித்த வாத நீரில் போட்டு ) வேகவிட்டு பின்னர் அடி பிடிக்காமல் கமலாக்கினியாக எரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் .இதை கீழே கொடுத்துள்ள காணொளிக் காட்சிகளின் மூலம் கண்டு தெளியுங்கள் .

[tube]http://www.youtube.com/watch?v=vFrK0OryiIY[/tube]

இதில் இருந்து வரும் புகை சிவனின் கூந்தல் போல செந்நிறத்தில் உள்ளதை கவனியுங்கள். சிவனுக்கு செஞ்சடையான் என்று பெயர் என்பதையும் கவனியுங்கள்.இது சிவ நர்த்தனம்.கண்டு களியுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=UusXrGWweos[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=Xrcse-quJt0[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=-ugd1IOH-xmc[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=-N2kpFKHxbpI[/tube]

இதற்கு மேலும் விளக்கங்களை  அடுத்து  திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான்,  நவலோக பூபதி பாகம் (3 ) ல் பார்க்கலாம்.