திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 1 )

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியானில் குறிப்பிடப்பட்டுள்ள நவலோக பூபதி எப்படி செய்வது  என்பதை இபோது பார்ப்போம்.

பிணமானாலும்  இந்த நவலோக பூபதி என்னும் மருந்தைக் கொடுத்தால் , பிணமானவனும் எழுந்து மூன்றே முக்கால் நாழிகை வரைக்கும் பேச வைக்கக் கூடிய மருந்து இது என்று திருவள்ளுவர் தனது ஞான வெட்டியானில் கூறியுள்ளார் என்றால் இதன் பெருமையைப் பற்றி நாம் சொல்லவும் வேண்டுமோ???

நவலோகங்களையும் , நவபாஷாணங்களையும்  கலந்து வைத்து ஒரே திரவமான ஆங்காரியாகிய பச்சை சிங்கத்தால் வேக வைத்து இந்த மருந்தை செய்வதை ஒளிப்படக் காட்சியாகவும் புகைப் படங்களாலும் விளக்க இருக்கிறேன். ( போகர் செய்த பழனி மலை முருகன் சிலையில் நவ பாஷாணங்கள் மட்டுமே உள்ளன எனில் நவலோக பூபதியில் நவ பாஷாணங்களும் , நவ உலோகங்களும் உள்ளதால்  அதைவிட சிறப்பானது ) .

நவ லோகங்களான ( 1654 பாடல் )  1 ) பொன்னிமிளை, 2 ) வெள்ளை அல்லது வெள்ளி அல்லது ரசிதம் , 3 ) தாமிரம் , 4 ) அயம் , 5 ) வங்கம் , 6 ) நாகம் , 7 ) வெங்கலம் , 8 ) வெள்வங்கம் , 9 ) பித்தளை இவ்வொன்பது  ( நவம் என்றால் ஒன்பது ) உலோகங்களையும் கீழே படத்தில் கொடுத்துள்ளேன்.

நவ லோகங்கள்

1) தங்கத்திற்கு சமமான பொன்னிமிளை

2) வெள்ளை என்ற வெள்ளி என்ற ரசிதம் 

3) தாமிரம் என்ற செம்பு 

4) அயம் என்ற இரும்பு 

5) வங்கம்  என்ற கருவங்கம் என்ற காரீயம் 

6) நாகம் என்ற துத்த நாகம்

7)வெங்கலம் என்ற வெண்கலம்

8) வெள்வங்கம் என்ற வெள்ளீயம்

9) பித்தளை

மேற்கண்ட ஒன்பது உலோகங்களையும் ராவி தூளாக்கிப் போட்டு அத்துடன் அடுத்த பதிவில் வரும் ஒன்பது பாஷாணங்களையும் (விஷங்களையும் ) போட்டு எப்படி நவலோக பூபதி செய்வது என்று வரும் பதிவுகளில் காணொளிக் காட்சிகளாக வெளியிடுகிறோம் . திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் (2 ) ல் தொடர்கிறேன் .